Bouchard-Wickmayer ஜோடி வெற்றி!

கோர்ட்-2-ல் நடைபெற்ற இரட்டையர் பிரிவின் R-16 போட்டியில் Bouchard-Wickmayer ஜோடி வெற்றி. K.Kawa- X.Han இணையை 6-2, 6-4 என்று எளிதாக வீழ்த்தினர்.
மற்ற போட்டிகளின் முடிவுகள்…

Court 1 : க்ரீஸின் D. Papamichail-ஐ 6-3, 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார் ரஷ்ய வீராங்கனை O. Selekhmeteva
Court 2 : ஆஸ்திரேலியாவின் Olivia Tjandramulia 6-1, 6-1 என்ற நேர் செட்களில் வென்றார் கனடாவின் Carol Zhao
Court 1 : ரஷ்யாவின் M. Tkacheva-ஐ 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்றார் தொடரின் இரண்டாம் நிலை வீராங்கனை V. Gracheva
போலந்தின் Magda Linette வெற்றி!

ஜப்பானின் M.Uchijima-வை 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார் போலந்து வீராங்கனை Magda Linette.
அன்கீத்தா ரெய்னா தோல்வி!

இந்தியாவின் அன்கீத்தா ரெய்னாவுக்கு எதிரான முதல் சுற்றை 6-0, 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார் T.Maria

மற்ற இரு போட்டிகளில் முடிவுகள்:
Court 1: நெதர்லாந்தின் A. Hartono-ஐ 1-6, 2-6 என்ற நேர் செட்களில் இங்கிலாந்தின் K. Swan வீழ்த்தினார்.
Court 2 : ஜப்பானின் K. Okamura-ஐ 4-6, 3-6 என்ற நேர் செட்களில் அர்ஜென்டீன வீராங்கனை N. Podoroska வீழ்த்தினார்.
ஷரத் கமல் வருகை!

நுங்கம்பாக்கம் SDAT டென்னிஸ் மைதானத்திற்கு டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமல் வருகை.
முதல் சுற்றை வெல்வாரா அன்கீத்தா ரெய்னா?

வைல்ட்-கார்டு போட்டியாளரான இந்தியாவின் Ankita Raina தொடரின் நான்காம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் T.Maria-வுடன் சென்டர் கோர்ட்டில் மோதல்.
Alison Riske அதிர்ச்சி தோல்வி!

சென்னை ஓப்பன் 2022 தொடரின் முதல் நிலை வீராங்கனையான Alison Riske Amritraj முதல் சுற்றில் தோல்வி. ரஷ்யாவின் Anastasia Gasanova-விடம் 2-6, 3-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். WTA தரவரிசையில் Alison Riske 23-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
களம்காண்கிறார் Alison Riske

சென்னை ஓப்பன் டென்னிஸ் தொடரின் இரண்டாம் நாள் போட்டிகள் தொடங்கின. இன்றைய முதல் ஆட்டமாக A. Gasanova-வுடன் சென்டர் கோர்ட்டில் மோதுகிறார் தொடரின் Top Seed வீராங்கனை Alison Riske.