சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கங்காகுளத்தைச் சேர்ந்தவர் ஜெயமுருகன் (27). திருவில்லிபுத்தூர் அருகே கம்மாபட்டியை சேர்ந்தவர் மாலதி (24). வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்த இருவரும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு இருவரும் கங்காகுளத்தில் வீடு எடுத்து தங்கி, திருவில்லிபுத்தூரில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தனர். மாலதி 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர்களது காதல் திருமணத்தை, இரு வீட்டாரும் ஏற்காததால், குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த காதல் தம்பதி, நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து திருத்தங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
