பிரித்தானிய ராணியாரின் இறுதிச் சடங்கு… கனடாவில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர்


கனடாவில் பெடரல் விடுமுறை என அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

விடுமுறையானது யார் யாருக்கு பொருந்தும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் விளக்கம்

பிரித்தானிய ராணியாரின் இறுதிச்சடங்குகளை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை கனடாவில் பெடரல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

குறித்த விடுமுறையானது யார் யாருக்கு பொருந்தும் என்ற விளக்கத்தை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தற்போது அளித்துள்ளார்.

பிரித்தானிய ராணியாரின் இறுதிச் சடங்கு... கனடாவில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் | Queen Funeral Federal Holiday Trudeau Announce

@getty

பிரித்தானிய ராணியாரின் இறுதிச்சடங்கானது எதிர்வரும் திங்கட்கிழமை 19ம் திகதி முன்னெடுக்கப்பட உள்ளது.
குறித்த நிகழ்வில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொள்ள இருக்கிறார்.

இந்த நிலையில், அன்றைய நாள் கனடாவில் பெடரல் விடுமுறை என அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
ஆனால் இந்த விடுமுறையானது அனைவருக்கும் பொருந்தாது எனவும், பெடரல் அரசாங்க ஊழியர்களுக்கு மட்டுமே அன்றைய நாள் விடுமுறை என கனடாவின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் Seamus O’Regan விளக்கமளித்துள்ளார்.

மேலும், அன்றைய நாள் வங்கிகள், விமான சேவை நிறுவனங்கள், அஞ்சல் அலுவலகங்கள் என பெடரல் அரசாங்கம் கட்டுப்படுத்தும் அலுவலகங்கள் அனைத்தும் செயல்படும்.

பிரித்தானிய ராணியாரின் இறுதிச் சடங்கு... கனடாவில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் | Queen Funeral Federal Holiday Trudeau Announce

@THE CANADIAN PRESS

இதனிடையே கியூபெக் பிராந்தியத்தில் விடுமுறை அறிவிக்க வாய்ப்பில்லை என முதல்வர் Francois Legault தெரிவித்துள்ளார்.
ஒன்ராறியோவிலும், துக்கமனுசரிக்கப்படும் எனவும் ஆனால் விடுமுறை அறிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார் முதல்வர் டக் ஃபோர்டு.

இதனிடையே, பிரதமர் ட்ரூடோ மற்றும் கவர்னர் ஜெனரல் மேரி சைமன் ஆகிய இருவரும் இறுதிச் சடங்கிற்காக இங்கிலாந்து செல்ல உள்ளனர்.
இருப்பினும், இவர்களுடன் யார் யார் செல்ல உள்ளனர் என்பது இதுவரை இறுதி செய்யப்படவில்லை என்றே கூறப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.