மதுரை: குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் சினிமா பாடல்களுக்கு ஆடவும், சினிமா பாடல்களை பாடவும் உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. பக்திப்பாடல்கள் அல்லாத பாடல்கள் ஒலிபரப்பப்படுவதில்லை என்பதை தூத்துக்குடி எஸ்.பி., ஆட்சியர் உறுதிப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கோயில் திருவிழாக்களில் கலைநிகழ்ச்சிகள் என்னும் பெயரில் ஆபாச நடனம் ஆடுவதையும், ஆபாச பாடல் இசைப்பதையும் அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
