கூல் சுரேஷுக்கு நன்றி சொல்லுங்க – சிம்பு வேண்டுகோள்

சினிமாவில் பல பிரச்னைகளை சந்தித்த சிம்புவுக்கு மிகப்பெரிய பலமே அவரது ரசிகர்கள். அப்படிப்பட்ட ரசிகர்களில் ஒருவர் கூல் சுரேஷ். சிம்புவின் எந்தப் படம் வெளியானாலும் ப்ரோமோஷன் செய்த அவர் ஒருகட்டத்தில் யார் பாடம் வந்தாலும், “வெந்து தணிந்தது காடு சிம்புவுக்கு வணக்கத்தை போடு” என்றே தனது பேச்சை தொடங்கினார்.

அவரது இந்தப் பேச்சு ஆரம்பத்தில் கேலி செய்யப்பட்டாலும் காலப்போக்கில் ரசிக்கப்பட்டது. அதேசமயம் அவரது இந்தப் பேச்சு விமர்சனத்தையும் எழுப்பியிருக்கிறது. அதற்கேற்றார்போல் கூல் சுரேஷுக்கு தேசிய முன்னேற்ற கழக தலைவர் ஜி.ஜி.சிவா தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய ஆடியோவும் வெளியானது.

இந்தச் சூழலில் வெந்து தணிந்தது காடு படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. ரசிகர்கள் முதல் நடிகர்கள்வரை பலரும் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர்.

 

வெந்து தணிந்தது காடு படத்தை பார்க்க திரையரங்குக்கு வந்த கூல் சுரேஷுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்தனர். 

 

இந்நிலையில் கூல் சுரேஷ் குறித்து இதுவரை பெரிதாக பேசாத சிம்பு தற்போது பேசியிருக்கிறார். ட்விட்டரில் உரையாடிய அவர், எல்லோரும் மனசார கூல் சுரேஷுக்கு நன்றி சொல்லிதான் ஆகவேண்டும். அவர் வேற லெவல். படத்துக்கு அவர் தனி புரொமோஷன் செய்துள்ளார். நன்றி கூல் சுரேஷ்” என கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.