தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல பொதுமக்கள் ஆம்னி பஸ்களில் டிக்கெட் இப்போதே புக் செய்ய துவங்கிய நிலையில், கட்டண உயர்வு அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இன்னும் ஒரு மாத காலம் இருக்கும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் சென்னையில் இருந்து பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்வலுக்கு செல்ல டிக்கெட்களுக்கான முன் பதிவுகளை செய்ய துவங்கி இருக்கின்றனர்.
அதன்படி, சென்னை பகுதியில் இருந்து கோயம்புத்தூருக்கு 2500 ரூபாய் முதல் 3200 வரை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. திருநெல்வேலிக்கு 1950-யும் மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு 3500 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
முந்தைய கட்டணங்களை விட இரண்டு மூன்று மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால், டிக்கெட் புக் செய்ய சென்ற பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு ஆம்னி பஸ்களின் ஆட்டத்திற்கு ஏதாவது முடிவு கட்ட வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.