உலக பணக்காரர் பட்டியலில் இந்தியாவின் அதானி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் என்பதை கடந்த சில வாரங்களுக்கு முன்பு பார்த்தோம். விரைவில் அவர் இரண்டாவது இடத்தையும் பிடிக்க வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் 2030ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக கோடீஸ்வரர்கள் இருப்பார்கள் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
குறிப்பாக மும்பை மற்றும் துபாய் ஆகிய இரண்டு பகுதிகளில் உலகிலேயே அதிக கோடீஸ்வரர்களை கொண்ட பகுதியாக இருக்கும் என்று அந்த ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் தனியுரிமையை பாதுகாக்க புதிய சட்டம்.. ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் தகவல்!

2030ல் கோடீஸ்வரர்கள்
துபாய், மும்பை மற்றும் ஷென்சென் ஆகிய பகுதிகளில் 2030 ஆம் ஆண்டுக்குள் பணக்கார நகரங்களில் ஒன்றாக இருக்கும் என்றும், இந்த மூன்று நகரங்களும் வேகமாக வளர்ந்து வருவதாகவும் ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் 2030 ஆம் ஆண்டுக்குள் அதிக மில்லியனர்களைக் கொண்ட முதல் 20 நகரங்களின் பட்டியலில் மும்பை இடம்பிடிக்கும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மில்லியனர்கள்
ஹென்லி & பார்ட்னர்ஸ் குழுமம் வெளியிட்ட 2022 ஆம் ஆண்டின் காலாண்டு குடிமக்கள் அறிக்கையின்படி ஒரு மில்லியன் டாலர்கள் அல்லது அதற்கு மேல் முதலீடு செய்யக்கூடிய சொத்துக்களை வைத்திருப்பவர்கள் மில்லியனர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது

துபாயில் மில்லியனர்கள்
துபாய் தற்போது அதிக மில்லியனர்களை கொண்ட பகுதியாக உள்ளது என்பதும், துபாய் இதில் உலகளவில் 23வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 67,900 மில்லியனர்கள், 13 பில்லியனர்கள் துபாயில் உள்ளனர்.

மும்பையில் மில்லியனர்கள்
இந்திய நகரமான மும்பையில் 60,600 மில்லியனர்கள் மற்றும் 30 பில்லியனர்கள் உள்ள நிலையில் உலக அளவில் மும்பை அதிக மில்லியனர்கள் கொண்ட பட்டியலில் 25வது இடத்தில் உள்ளது.
துபாய், மும்பையை அடுத்து சீன நகரமான ஷென்சென் தற்போது 30வது இடத்தில் உள்ளது. இங்கு 17 பில்லியனர்கள் மற்றும் 43,600 மில்லியனர்கள் உள்ளனர். இந்த நகரம் சீனாவின் ஹைடெக் தலைநகரமாக காணப்படுகிறது

அதிக மில்லியனர்களைக் கொண்ட 20 நகரங்கள்
துபாய், மும்பை மற்றும் ஷென்சென் ஆகிய மூன்று நகரங்களும் எதிர்காலத்தில் செல்வ செழிப்பான நகரங்களாக இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போதைய நிலையில் அதிக எண்ணிக்கையிலான மில்லியனர்களைக் கொண்ட முதல் 20 நகரங்கள் பின்வருமாறு:
1.நியூயார்க் (345,600 மில்லியனர்கள்)
2. டோக்கியோ (304,900 மில்லியனர்கள்)
3.சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி (276,400 மில்லியனர்கள்)
4. லண்டன் (272,400 மில்லியனர்கள்)
5.சிங்கப்பூர் (249,800 மில்லியனர்கள்)
6. லாஸ் ஏஞ்சல்ஸ் (192,400 மில்லியனர்கள்)
7.சிகாகோ (160,100 மில்லியனர்கள்)
8. ஹூஸ்டன் (132,600 மில்லியனர்கள்)
9. பெய்ஜிங் (131,500 மில்லியனர்கள்)
10. ஷாங்காய் (130,100 மில்லியனர்கள்)
11.சிட்னி (129,500 மில்லியனர்கள்)
12.ஹாங்காங்(125,100 மில்லியனர்கள்)
13. பிராங்பேர்ட் (117,400 மில்லியனர்கள்)
14. டொராண்டோ (116,100 மில்லியனர்கள்)
15.சூரிச் (105,100 மில்லியனர்கள்)
16. சியோல் (102,100 மில்லியனர்கள்)
17.மெல்போர்ன் (97,300 மில்லியனர்கள்)
18.டல்லாஸ் & ஃபோர்ட் வொர்த் (92,300 மில்லியனர்கள்)
19.ஜெனீவா (90,300 மில்லியனர்கள்)
20. பாரிஸ் (88,600 மில்லியனர்கள்).

அமெரிக்காவில் மில்லியனர்கள்
மொத்தத்தில், அதிக மில்லியனர்களைக் கொண்ட முதல் 10 நகரங்களில் பாதி அமெரிக்காவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
In 20230 Mumbai and Delhi will be Wealthiest cities with Millionaires!
In 20230 Mumbai and Delhi will be Wealthiest cities with Millionaires! | 2030ல் அதிக மில்லியனர்கள் கொண்ட நகரம்.. இந்தியாவின் இந்த நகரம் தான்.. ஆய்வில் தகவல்