வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் எனும் நிலையிலிருந்து கீழே இறங்கி, மீண்டும் மூன்றாம் இடத்துக்கு வந்துள்ளார், கவுதம் அதானி.
இதையடுத்து, மூன்றாவது இடத்தில் இருந்த ‘அமேசான்’ நிறுவனர் ஜெப் பெசோஸ், மீண்டும் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.உலக அளவில், பங்குகளை விற்கும் போக்கு அதிகரித்து, பங்குச் சந்தைகள் சரிவை கண்டு வருகின்றன. இதன் காரணமாக, அதானி குழுமத்தின் பல நிறுவன பங்குகளின் விலையும் சரிவைக் கண்டன.
![]() |
இதையடுத்து, கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 6.9 பில்லியன் டாலர், அதாவது, கிட்டத்தட்ட 56 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துபோனது.இதற்கிடையே, ஜெப் பெசோசின் மதிப்பு, 11 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரிக்கவும், இரண்டாது இடத்துக்கு முன்னேறி உள்ளார். ‘புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸ்’ தரவுகளின் அடிப்படையில், உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இதன்படி, தற்போது கவுதம் அதானி மூன்றாவது இடத்திலும்; ஜெப் பெசோஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். ‘டெஸ்லா’ தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், முதலிடத்தை தொடர்ந்து தக்கவைத்து வருகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement