16,000 அடி உயரத்தில் களமிறங்கிய சிறப்புப் படை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: உத்தரகண்டில், இமயமலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டு இருந்தபோது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 27 வீரர்களை மீட்பதற்காக 16 ஆயிரம் அடி உயரத்தில் தேடுதல் பணியை மேற்கொள்ள சிறப்புக் குழுவினர் சென்றுள்ளனர்.

latest tamil news

உத்தரகண்டிலிருக்கும் இமயமலையில், ‘திரவுபதி’ மலைச்சிகரம் உள்ளது. இங்குள்ள, நேரு மலையேற்ற பயிற்சி மையம், மலையேற்ற வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த பயிற்சி மையத்தின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் திரவுபதி மலைச்சிகரத்தில் ஏறினர்.
இதில் ஒரு பகுதியினர் நேற்று முன்தினம் திரும்பி கொண்டிருக்கையில், திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கினர். இந்நிலையில், நேரு பயிற்சி மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:இந்த மலையேற்ற பயிற்சியில், ஏழு பயிற்சியாளர்கள் உட்பட 61 பேர் பங்கேற்றனர்.

பனிச்சரிவு:


கடந்த சில தினங்களுக்கு முன், ஏற்பட்ட பனிச்சரிவில் 41 பேர் சிக்கினர். இதில் ஐந்து பயிற்சியாளர்கள் உட்பட 10 பேர் மலைப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டனர். மேலும் நான்கு பேர், ‘பேஸ் கேம்ப்’ பகுதியில் மீட்கப்பட்டனர். மீதமுள்ள 27 பேர், பனிப்பாறை பிளவுகளில் சிக்கி இறந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

latest tamil news

இந்நிலையில், விமானப்படை, மாநில பேரிடர் மீட்பு படையினர் ஆகியோர் கூட்டாக இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 48 மணிநேரம் கடந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், 16,000 அடி உயரத்தில் ராணுவ ஹெலிகாப்டரை தரையிறக்குவதற்கான பணிகள் நடைபெற்ற நிலையில், இன்று(அக்.,06) காலை சோதனை தரையிறக்கமும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தின் மலையேற்றப் பயிற்சிப் பெற்ற வீரர்கள் 16,000 அடி உயரத்தில் தேடுதல் பணியில் ஈடுபடுவதற்காக ஹெலிகாப்டரில் அனுப்பப்பட்டுள்ளனர்.

latest tamil news

கனமழை எச்சரிக்கை:


மேலும், அடுத்த மூன்று நாள்களுக்கு பனிச்சரிவு மற்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மலையேற்றப் பயிற்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.