திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஆற்காடு மட்டன் பிரியாணி, பலாக்காய் பிரியாணி, விருதுநகர் பரோட்டா என சைவ , அசைவ வகைகளில் விதவிதமாக விருந்தளிக்கப்படுகிறது.
மட்டன் பிரியாணி , ஆற்காடு மக்கன் பேடா , முட்டை , கத்திரிக்காய் பச்சடி , தயிர் பச்சடி , உருளை வறுவல் , ஆரஞ்சு ஐஸ் கிரீம் , கல்கத்தா ஸ்வீட் பீடா , வாழைப்பழம் , வாட்டார் பாட்டில் இவை அசைவ உணவு பட்டியலில் உள்ளன.
திருவையாறு அசோகா , கேரளா பாலாடை , ஆனியன் மசாலா வடை , ஊட்டி கத்தரிக்காய் சாப்ஸ் , வெள்ளரி கேரட் மாதுளம் தயிர் பச்சடி , உருளை பட்டாணி காரக்கறி , சப்பாத்தி , விருதுநகர் ஆனியன் பரோட்னா , நவரத்தின வெஜ் குருமா , கடலைக்கறி , வெஜ் சாலனா , பலாக்காய் பிரியாணி , சின்ன வெங்காயம் அரைத்துவிட்டு உள்ளித் தயிர் சாதம் , கேரளா நெய் சாதம் , லெமன் சாதம் , தூதுவளை ரசம் , ப்ரூட் சாலட் , பீடா , வாழைப்பழம் இவை சைவ உணவு பட்டியல்.
சென்னை அமைந்தகரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் நிலையில், ஆங்காங்கே போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டம் காரணமாக ஆழ்வார்ப்பேட்டை முதலமைச்சர் இல்லம் முதல் அமைந்தகரை வரை சாலையில் இருபுறத்திலும் நூற்றுக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
newstm.in