அரசாங்க நிலத்தை விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்காக வழங்குவதில் எந்தவொரு அரசாங்க அதிகாரியும் தலையிட வேண்டாம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பிரதமர் இதனை ர் குறிப்பிட்டார்.
விவசாயத்தில் தன்னிறைவு அடைய வேண்டும்
பல்வேறு சுற்றறிக்கைகளின்படி அரசாங்க நிலங்களை விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்காக வழங்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைய வேண்டும் என்றும் கூறினார்.