ஜெமினி கணேசன் – தெலுங்கு நடிகை புஷ்பவல்லி ஆகியோரின் மகள் தான் ரேகா என்கிற பாணு ரேகா. சென்னையில் பிறந்த இவர் ரஜ்ஹோலா ரத்னம் என்கிற தெலுங்கு படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தற்போது அவரது சுயசரிதை புத்தகத்தை யசீர் உஸ்மான் எழுதி வெளியிட்டுள்ளார். அதில் தான் நடித்த முதல் பாலிவுட் படமான அஞ்சனா சஃபர் திரைப்படத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து விவரித்துள்ளார்.
அஞ்சனா சஃபர் படத்தில் பெங்காலி நடிகர் பிஸ்வஜீத் சாட்டர்ஜிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரேகா. அப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு வயது 15 தான். அப்போது ரேகாவிடம் தெரிவிக்காமலே அப்படத்தின் இயக்குனர் ராஜா நவாதே ஒரு 5 நிமிட முத்தக் காட்சியை படமாக்கினாராம். இந்தக் கொடுமை குறித்து பேசியுள்ள ரேகா, இயக்குனர் ராஜா நவாதே ஆக்ஷன் சொன்னதும் நடிகர் பிஸ்வஜீத் சாட்டர்ஜி சட்டென என் உதட்டில் முத்தம் கொடுக்க ஆரம்பித்தார். இயக்குனர் கட் சொல்லாததால் 5 நிமிடங்கள் எனக்கு லிப்கிஸ் கொடுத்துக்கொண்டே இருந்தார் பிஸ்வஜீத் சாட்டர்ஜி. அப்போது நான் அழுது கண்ணீர் சிந்தினேன். இப்படி ஒரு காட்சி எடுக்கபோவதாக இயக்குனர் ரேகாவிடம் சொல்லவே இல்லை என மனம் வருந்தியுள்ளார்.