கடலூர்: சிதம்பரம் பேருந்து நிலையத்தில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பாலிடெக்னிக் மாணவனிடம் 2-வது நாளாக 7 மணி நேரம் விசாரணை நடத்திய பிறகு இன்னும் சற்று நேரத்தில் பண்ருட்டி சிறார் சீர்திருத்த பள்ளிக்கு மாணவனை அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர்.