இளவரசர் ஹரிக்கு நெருக்கடி தரும் சார்லஸ் மன்னர்: வெளிவரும் புதிய பின்னணி


புத்தகம் வெளியிடவிருக்கும் நிறுவனத்திற்கு உரிய தொகையை திருப்பி செலுத்தவும் மன்னர் சார்லஸ் தயார்

இளவரசர் ஹரி மொத்தமாக 60 மில்லியன் டொலர் தொகை கைப்பற்றியுள்ளார்.

இளவரசர் ஹரி வெளியிடவிருக்கும் நினைவுக் குறிப்புகள் புத்தகம் வெளிவராமல் இருக்க மன்னர் சார்லஸ் நடவடிக்கை முன்னெடுப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

புத்தகம் வெளியிடவிருக்கும் நிறுவனத்திற்கு உரிய தொகையை திருப்பி செலுத்தவும் மன்னர் சார்லஸ் தயார் என்றே கூறப்படுகிறது.
கடந்த 2021 ஜூலை மாதம் பிரித்தானிய ராஜகுடும்பத்து உறுப்பினர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தும் தகவலை இளவரசர் ஹரி வெளியிட்டார்.

இளவரசர் ஹரிக்கு நெருக்கடி தரும் சார்லஸ் மன்னர்: வெளிவரும் புதிய பின்னணி | Stop Memoir King Charles Pay Harry Publishers

@getty

அதாவது, தமது வாழ்க்கையின் முக்கிய தருணங்களை வெளிப்படையாக நினைவுக் குறிப்புகள் என வெளியிட இருப்பதாக அறிவித்தார்.
ஆனால் பல காரணங்களால் குறித்த நினைவுக் குறிப்புகள் புத்தகமானது வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், எலிசபெத் ராணியார் காலமாக, புத்தகம் வெளியாவதில் மேலும் கால தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், தற்போதைய சூழலில் குறித்த புத்தகம் இனி வெளிவராது என்றே கூறப்படுகிறது.

மன்னர் சார்லஸ் அது தொடர்பான நடவடிக்கை முன்னெடுப்பார் என்றே நம்பப்படுகிறது.
குறித்த புத்தகத்திற்காக ஹரி கைப்பற்றியுள்ள தொகையை மன்னர் சார்லஸ் அந்த நிறுவனத்திற்கு அளிக்க முன்வரலாம் எனவும், இதனால் அந்த புத்தகம் வெளிவராமல் போகலாம் எனவும் கூறுகின்றனர்.

இளவரசர் ஹரிக்கு நெருக்கடி தரும் சார்லஸ் மன்னர்: வெளிவரும் புதிய பின்னணி | Stop Memoir King Charles Pay Harry Publishers

@getty

தொடர்புடைய புத்தகத்திற்காக இளவரசர் ஹரி மொத்தமாக 60 மில்லியன் டொலர் தொகை கைப்பற்றியுள்ளார்.
அரண்மனையில் தமது வாழ்க்கை தொடர்பில் வெளிப்படையாக பல சம்பவங்களை அவர் வெளியிடுவார் என்றே கூறப்பட்டது.

இந்த நவம்பர் மாதம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், ராணியாரின் இறப்பும், அத்துடன் குறிப்பிட்ட சில திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும் என ஹரி கேட்டுக்கொண்டதால், புத்தகம் வெளியாக தாமதமாகி வருகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.