நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், அரசுப்பேருந்து நடத்துநருக்கும், போதை ஆசாமி ஒருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.
ராசிபுரத்திலிருந்து காரவள்ளி நோக்கி சென்ற அரசுப்பேருந்தில் ஏறிய அந்த போதை ஆசாமி, பேருந்து செல்லாத ஊருக்கு டிக்கெட் கேட்டு நடத்துநரிடம் ரகளை செய்ததாகக் கூறப்படுகிறது.
சாலையில் இறங்கி சண்டையிட்ட இருவரையும் ஓட்டுநரும், சக பயணிகளும் சமாதானம் செய்தனர்.
மதுபோதையில் வாக்குவாதம் செய்த அந்த நபரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.