பன்றி காய்ச்சலுக்கு இது தான்..தீர்வு?; அரசு பகீர் முடிவு; பொதுமக்கள் ஷாக்!

கேரளா மாநிலம் திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதால் 1 கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும், அனைத்து பன்றிகளையும் கொலை செய்ய முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

கேரளா மாநிலம், திருச்சூர் ஏட்டுமுனை பகுதியில் இருக்கும் தனியார் பண்ணையில் வளர்க்கப்படும் பன்றிகள் சமீபத்தில் கூட்டமாக இறந்தன. உடனே இவற்றின் மாதிரிகள் போபாலில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் கேரளாவில் உள்ள பன்றிகளுக்கு ஆப்பிக்க பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 10 கிமீ சுற்றளவிலுள்ள பண்ணைகளில் இருக்கும் பன்றிகளை கண்காணிக்க கேரளா அரசின் சார்பில் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

மேலும், பாதிப்புக்கு உள்ளான குறிப்பிட்ட பன்றி பண்ணையில் வேலை பார்த்தவர்கள் ரத்தத்தை பரிசோதிக்கவும், அவர்களின் உடல் நிலையை கண்காணிக்கவும் சிறப்பு குழு நியமிக்கப்பட்டு இருக்கிறது.

அதுமட்டும் அல்லாமல் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பன்றிகள், பன்றி இறைச்சி மற்றும் பன்றி தீவனங்களை வாங்கவும், விற்கவும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

அத்துடன் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையில் 24 மணி நேரம் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, மாவட்ட கலெக்டர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில், நோய் கண்டறியப்பட்ட பகுதியில் இருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து பன்றிகளையும் கொல்ல முடிவெடுக்கப்பட்டு இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.