புடினுக்கு துரோகம் செய்த ரஷ்ய குடிமக்கள்: பாலம் வெடிப்பு தொடர்பான குற்றவாளிகளை FSB கைது


கிரிமியா பாலம் வெடிப்பில் தொடர்புடைய நபர்கள் கைது.

உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகத்தின் முக்கிய புலனாய்வு இயக்குநரகத்தால் இந்த வெடிப்ப ஏற்பாடு.

கிரிமியா பாலத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு நிகழ்வை தொடர்ந்து, அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை ரஷ்யாவின் FSB அமைப்பு அதிரடியாக கைது செய்துள்ளது.

உக்ரைன் எதிர்ப்பு தாக்குதலின் உச்சக்கட்டமாக ரஷ்யாவையும் கிரிமியாவையும் இணைக்கும் கெர்ச் பாலத்தில் கார் வெடிகுண்டு தாக்குதல் கடந்த வாரம் நடத்தப்பட்டது, இதில் 3 பேர் வரை கொல்லப்பட்டனர்.

உக்ரைனின் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு கடுமையான கண்டனம் தெரிவித்த ரஷ்யா, தலைநகர் கீவ் உட்பட உக்ரைனின் முக்கிய நகரங்களில் தாக்குதல் 100க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது, இதில் 26 பேர் வரை கொல்லப்பட்டனர், டஜன் கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து ரஷ்ய உளவுத் துறை ஜனாதிபதி புடினிடம் வழங்கிய அறிக்கையில், பாலம் மீதான தாக்குதலுக்கு உக்ரைன் வீரர்கள் மட்டுமில்லாமல் சில ரஷ்யர்களும் உதவி இருப்பதாக தெரிவித்து இருந்தது.

இந்தநிலையில், சனிக்கிழமையன்று கிரிமியாவில் கெர்ச் பாலத்தை சேதப்படுத்தியது வெடிப்பு தொடர்பாக ஐந்து ரஷ்யர்களையும் உக்ரைன் மற்றும் ஆர்மீனியாவின் மூன்று குடிமக்களையும் கைது செய்து ரஷ்யாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் (FSB) தெரிவித்து இருப்பதாக இன்டர்ஃபாக்ஸ் அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.


கூடுதல் செய்திகளுக்கு: கிரீடத்தை தொட்டு சபதம் செய்யும் இளவரசர் வில்லியம்: சார்லஸ் மன்னரின் கைகளை முத்தமிடும் அரச வாரிசுகள்

புடினுக்கு துரோகம் செய்த ரஷ்ய குடிமக்கள்: பாலம் வெடிப்பு தொடர்பான குற்றவாளிகளை FSB கைது | Russia Fsb Arrests For Crimea Bridge Blast Ukraine

மேலும் இந்த அறிக்கையில், உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகத்தின் முக்கிய புலனாய்வு இயக்குநரகம் மற்றும் அதன் இயக்குனர் கைரிலோ புடானோவ் ஆகியோரால் இந்த வெடிப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக FSB தெரிவித்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.