கிளிநொச்சியில் உள்ள ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையத்திற்கு,பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரன திடீர் விஜயம் ஒன்றை நேற்றையதினம் (12) மேற்கொண்டார்.
இதன்போது உப்பு உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மற்றும் தேவைகள் குறித்து உப்பளத்தின் முகாமையாளர் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில்,தேசிய உப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஏ.பி. மொரகொட உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.