ரஷ்யாவுக்கு ஐ.நா., சபை கண்டனம்: நிறைவேறியது தீர்மானம்!

உக்ரைந் ரஷ்யா இடையேயான போர் கடந்த 8 மாதங்களாக நீடித்து வருவதற்கிடையே, உக்ரைனின் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியது. இதையடுத்து, இந்த நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொள்ள திட்டமிட்ட ரஷ்யா, இதுதொடர்பாக பொதுவாக்கெடுப்பையும் நடத்தியுள்ளது.

உக்ரைனின் 4 நகரங்களை ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்டுள்ளதை எதிர்த்து ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், உக்ரைன் பிராந்தியங்களை ரஷ்யா இணைத்துக் கொண்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஐ.நா., சபையில் நிறைவேறியது. மொத்தம் 193 உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற அந்த வாக்கெடுப்பில், தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகள் வாக்களித்துள்ளன. ரஷ்யா, பெலாரஸ், வடகொரியா, சிரியா, நிகரகுவா உள்ளிட்ட ஐந்து நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளன. இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. இதர நாடுகள் வாக்களிக்கவில்லை.

முன்னதாக, இந்த தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ரஷ்யா ஐக்கிய நாடுகள் சபையில் கோரிக்கை வைத்தது. இது தொடர்பான வாக்கெடுப்பின் போது, இந்தியா உள்பட 107 நாடுகளின் பிரதிநிதிகள் ரஷ்யாவின் கோரிக்கைக்கு எதிராக வாக்களித்தனர். ரஷ்யாவின் கோரிக்கைக்கு ஆதரவாக 13 நாடுகள் மட்டுமே வாக்களித்தன. மீதமுள்ள 39 நாடுகள் வாக்களிக்காமல் இருந்தன. இதனை எதிர்த்து ரஷ்யா மேல்முறையீடு செய்தது. அதிலும், ரஷ்யாவுக்கு தோல்வியே மிஞ்சியது. தொடர்ந்து, இந்த தீர்மானத்தின் மீது பதிவு செய்யப்பட்ட வாக்கெடுப்புக்கு ஏற்றுக்கொள்வதற்கான முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் ரஷ்யா விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

பறக்கும் கார்… சீன நிறுவனம் துபாயில் கொடுத்த சர்ப்ரைஸ்!

இந்த நிலையில், உக்ரைன் பிராந்தியங்களை ரஷ்யா இணைத்துக் கொண்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஐ.நா., சபையில் நிறைவேறியுள்ளது. இதனை உக்ரைன் வரவேற்றுள்ளது. ரஷ்யாவால் உலகை மிரட்ட முடியாது என்பதை இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் காட்டியுள்ளன என ஐக்கிய நாடுகள் சபைக்கான உக்ரைன் தூதர் செர்ஜி சைல்ஸ்ட்யா தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.