பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரி உதவி பேராசிரியர்கள் 254 பேரின் கல்வி சான்றிதழ்களை சரி பார்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பச்சையப்பன் அறக்கட்டளை மூலம் செயல்படுகின்ற கல்லூரிகள் தரமற்று செயல்படுவதாக புகார்கள் எழுந்தன. அத்துடன், இதில் 2013 முதல் 2015 ஆம் ஆண்டு வரை தேர்வு செய்யப்பட்ட பேராசிரியர்களில் 152 பேர் தகுதியானவர்கள் இல்லை என்று புகார் எழுந்தது.
இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஆசிரியர்களின் கல்வித் தகுதி மிக முக்கியம் என்றும், பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படுகின்ற கல்லூரிகளில் நியமிக்கப்பட்டிருக்கும் உதவி பேராசிரியர்களின் கல்வித் தரத்தை ஆராய வேண்டும் என்றும், முன்னதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இத்தகைய சூழலில், 2013 முதல் 2015 ஆம் ஆண்டு வரை தேர்ந்தெடுக்கப்பட்ட பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரி உதவி பேராசிரியர்கள் 254 பேரின் கல்வி சான்றிதழ்களை சரி பார்த்து நவம்பர் 14 க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக கல்வி இயக்குனருக்கு உய்ரநீதி மன்றம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது