கேரள நரபலி கொடூரர்களுக்கு 1 2 நாள் போலீஸ் சாட்டை!| Dinamalar

கொச்சி :தமிழகத்தைச் சேர்ந்தவர் உட்பட இரண்டு பெண்களை நரபலி கொடுத்த கேரள தம்பதி உட்பட மூன்று பேரை, 12 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு கொச்சி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.

மூவர் கைது


இங்கு, பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லாவைச் சேர்ந்த ஒரு தம்பதி, பணக்காரராக வேண்டும் என்ற ஆசையில் மாந்த்ரீகத்தை நம்பி, தமிழகத்தைச் சேர்ந்தவர் உட்பட இரண்டு பெண்களை நரபலி கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பகவல் சிங், 68, அவருடைய மனைவி லைலா, 58 மற்றும் மாந்த்ரீகத்தில் ஈடுபட்ட முகமது ஷபி, 52, ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், விரைவில் பணக்காரராகும் ஆசையில், இந்த தம்பதி நரபலி கொடுத்ததும், அதற்கான ஆலோசனை வழங்கியதில் இருந்து நரபலி கொடுக்க இரண்டு பெண்களை அழைத்து வந்தது என, பல வகையில் முகமது ஷபி உதவியுள்ளதும் தெரியவந்துள்ளது.
தமிழகத்தின் தர்மபுரியைச் சேர்ந்த பத்மா, கேரள மாநிலம் காலடியைச் சேர்ந்த ரோஸ்லின் ஆகியோர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதுடன், அவர்களுடைய உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டுஉள்ளது விசாரணையில் தெரியவந்தது.
நிர்வாண பூஜை செய்ததுடன், கொல்லப்பட்ட பெண்களின் உடல் பாகங்களை, தம்பதி சமைத்து சாப்பிட்டதும் தெரியவந்து உள்ளது.

அனுமதி


கைது செய்யப்பட்ட மூவரும், கொச்சி நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுஇருந்தது. இந்நிலையில், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்ற நீதிமன்றம், 12 நாள் போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.