தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற அக்-17-ந்தேதி நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முன்பு இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
அதன்படி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். சட்டசபை கூட்டம் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
இதையடுத்து, வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழைநீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அளவில் பேசும் பொருளாக இருக்கும் பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை அவசர சட்டம் தற்போது அமலில் உள்ள நிலையில், அதை நிரந்தர சட்டமாக மாற்றுவதற்கான மசோதா இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.