அஜித் நடித்துள்ள துணிவு மற்றும் விஜய் நடித்துள்ள வாரிசு ஆகிய இரண்டு படங்களும் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் துணிவு, வாரிசு இரண்டு படங்களும் 2023 பொங்கலுக்கு ரிலீசாவதை உறுதி செய்தார்.
வழக்கமாக பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளில் முன்னணி நட்சத்திரங்களின் படம் வெளியாவது திரைப்பட ரசிகர்களுக்கு போனஸாக இருக்கும், 2023 பொங்கல் இரட்டிப்பு போனஸாக அமைந்திருக்கிறது.
ஜனவரி 12 ம் தேதி அஜித்தின் துணிவு படமும், ஜனவரி 13 ம் தேதி விஜய்யின் வாரிசு படமும் ரிலீசாக இருக்கிறது.
இதற்கு முன் 2014 ம் ஆண்டு பொங்கலுக்கு விஜய், மோகன்லால் நடித்த ஜில்லா படத்துடன் அஜித் நடித்த வீரம் வெளியானது, தற்போது ஒன்பது ஆண்டுகள் கழித்து அஜித், விஜய் படங்கள் வெளியாகிறது.