சிட்னி : ஆஸ்திரேலியாவில் பணம் தர மறுத்த இந்திய இளைஞரை கத்தியால் சரமாரியாக குத்திய வழிப்பறி கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
உத்தர பிரதசேம் மாநிலம் ஆக்ரா நகரை சேர்ந்தவர் சுபம் கார்க் 28. சென்னை ஐ.ஐ.டி.யில் பட்டம் பெற்ற இவர் மேற்படிப்புக்காக செப். 1ல் ஆஸ்திரேலியா வந்தார். இங்கு நியூ சவுத் வேல்ஸ் பல்கலையில் முனைவர் பட்டம் பெறுவதற்கான ஆராய்ச்சிப் படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இரவு 10:30 மணிக்கு தெருவில் நடந்து சென்ற போது எதிரில் வந்த வழிப்பறி கொள்ளையன் பணம் கேட்டு சுபத்தை மிரட்டினான்.
தர மறுத்த சுபத்தின் முகம் மார்பு, வயிற்றில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினான். போலீசாரால் மீட்கப்பட்ட சுபம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆஸி. போலீசார் வழிப்பறி கொள்ளையனை கைது செய்தனர். சுபம் விரைவில் நாடு திரும்ப உதவும்படி அவரது தங்கை இந்திய தூதரகம் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement