ரஷ்யாவுடன் கைகோர்த்த பெலாரஸ்: 9000 வீரர்கள் உக்ரைனிய எல்லையில் குவிப்பு


எல்லை பாதுகாப்பிற்காக கிட்டத்தட்ட 9000 ரஷ்ய வீரர்கள் பெலாரஸில் நிறுத்தம்.

ராணுவ வீரர்கள் குழுவின் இடமாற்றம் சில நாட்கள் பிறகு மேற்கொள்ளப்படும்.

எல்லைகளை பாதுகாப்பதற்காக கிட்டத்தட்ட 9000 ரஷ்ய ராணுவ துருப்புகள் பெலாரஸ் நாட்டில் நிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளிடம் இருந்து எல்லைகளை பாதுகாப்பதற்காக பிராந்தியக் குழுவின் ஒற்றை பகுதியாக 9000 ரஷ்ய வீரர்களுக்கு சற்று குறைவான துருப்புகள் பெலாரஸ் நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக சனிக்கிழமை மின்ஸ்கில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவுடன் கைகோர்த்த பெலாரஸ்: 9000 வீரர்கள் உக்ரைனிய எல்லையில் குவிப்பு | 9 000 Russian Troops To Be Hosted In Belarus

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்தின் சர்வதேச இராணுவ ஒத்துழைப்புத் துறையின் தலைவர் வலேரி ரெவென்கோ ட்விட்டரில் தெரிவித்துள்ள தகவலில், பிராந்திய குழுவில் அங்கம் வகிக்கும் ரஷ்ய ராணுவ வீரர்களை உள்ளடக்கிய முதல் துருப்பு பயிற்சி குழு பெலாரஸ் வர தொடங்கி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த ராணுவ வீரர்கள் குழுவின் இடமாற்றம் சில நாட்கள் பிறகு மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

இதன் மொத்த எண்ணிக்கை 9000 பேருக்கு சற்று குறைவாக இருக்கும் என்றும், கூடுதல் தகவல்கள் ராணுவ அதிகாரிகளுக்கான மாநாட்டில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுடன் கைகோர்த்த பெலாரஸ்: 9000 வீரர்கள் உக்ரைனிய எல்லையில் குவிப்பு | 9 000 Russian Troops To Be Hosted In Belarus

கூடுதல் செய்திகளுக்கு: ராணி எலிசபெத்திடம் இருந்து பெற்ற பாரம்பரியம்…விரைவாக ஏலத்தில் விற்க மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிவு!

உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளால் ஆபத்து ஏற்படக்கூடும் என மேற்கோள் காட்டி பேசிய பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, உக்ரேனிய எல்லைக்கு அருகே ரஷ்ய படைகளுடன் தனது நாட்டு துருப்புக்களும நிலைநிறுத்தப்படும் என தெரிவித்து இருந்தார்.

ரஷ்யாவுடன் கைகோர்த்த பெலாரஸ்: 9000 வீரர்கள் உக்ரைனிய எல்லையில் குவிப்பு | 9 000 Russian Troops To Be Hosted In BelarusAP/picture alliance



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.