பணத்தை மோசடி செய்ததாக தெரிவிக்கப்படும் திலினி பிரியமாலி என்ற பெண் தொடர்பாக விரிவான விசாரணைகள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றன.
பெண்ணுக்கு சொந்தமான மற்றுமொரு அலுவலகம் நேற்று முன்தினம் (15) சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை காலை 10.00 மணியளவில் சிறைச்சாலையில் இருந்து இவரை அழைத்து சென்று ,அவரது அலுவலகத்தை கடுமையான சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.அங்கு கிடைத்த பல ஆவணங்களையும், அந்த அலுவலகத்தில் அவரை சந்திக்க வந்தவர்கள், என்பது பற்றிய அறிந்துகொவதற்காக பாதுகாப்பு கேமரா தரவுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இதனடிப்படையில் பிரியமாலியின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்ட வெளியார் மற்றும் அவ்வாறு வைப்பிலிடுவதற்கு ஊக்குவிப்பு செய்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.