கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அறிவியல் ஆராச்சியாளருக்கு, தைவானை சேர்ந்த பெண்ணுடன் இன்று தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.
ஆவத்துவாடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், ஜப்பானில் உள்ள கொயோட்டோ பல்கலைகழகத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், அங்கு பணிபுரியும், தைவானை சேர்ந்த சியாங் ஷியா ஜோன் என்பவருடன் அவருக்கு காதல் மலர்ந்தது.
இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் இன்று காவேரிப்பட்டணம், கோட்டை பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.