பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகம்!
சென்னையில் நடைபெற்ற ஹரிஜன் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினரா தமிழக ஆளுநர் ரவி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழகத்தில் பட்டியல் இன மக்கள் தீண்ட தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை இப்பொழுதும் நிகழ்வதாக தெரிவித்தார். ஏன் இந்த கொடுமை என கவர்னர் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது “கடுமையான சட்டங்கள் இருந்தும் தீண்டாமை தொடர்பாக பல்வேறு சம்பவங்கள் தமிழ்நாட்டில் நிலவுகிறது. தமிழகத்தில் பட்டியல் இன மக்களை தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை இன்னும் ஏன் நிலவுகிறது. பட்டியல் இன பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை சகித்துக் கொள்ள முடியாது.
பட்டியலின மக்களுக்கு எதிராக குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களில் 85 சதவீதம் பேர் தண்டனைகளில் இருந்து தப்பி விடுகின்றனர். இன்னும் பல இடங்களில் பள்ளி மற்றும் கோவில்களில் பட்டியலின மக்கள் தீண்ட தகாதவர்களாக நடத்தப்படுகின்றனர். இந்தியாவில் சராசரியாக 6 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களில் 28 சதவீதம் பேர் மட்டுமே பள்ளிக்கு செல்கின்றனர். ஆனால் தமிழகத்தில் 51 சதவீதம் குழந்தைகள் பள்ளியில் செல்கின்றனர். இது தமிழகத்தில் பள்ளிக்கல்வி சிறப்பாக விளங்குவதை காட்டுகிறது. இதற்கு தமிழகம் பெருமை கொள்ள வேண்டும்” என ஆளுநர் பேசியுள்ளார்.