துரந்தோ ரயிலில் துப்பாக்கி முனையில் கொள்ளை.. நாட்டை உலுக்கிய பகீர் சம்பவம்!

வட இந்தியா பகுதிகளில் கொள்ளை கும்பல் ரயில்களை பாதி வழியில் நிறுத்தி பயணிகளை துப்பாக்கி முனையில் நிறுத்தி கொள்ளையடிக்கும் சம்பவங்கள் முன்பெல்லாம் அடிக்கடி நடக்கும். இதுபோன்ற சம்பவங்களின் போது போலீசார் மீதே தாக்குதல் நடத்தப்பட்ட நிகழ்வுகளும் உண்டு.

ஆனால், கண்காணிப்பு கேமராக்கள் வளர்ச்சி, துரிந்த நடவடிக்கை உள்ளிட்டவற்றால் ரயில்களில் கொள்ளை கும்பல் அட்டகாசம் இல்லாமல் இருந்தது. இதனால், வனப்பகுதிகள் வழியாக செல்லும் ரயில்களில் கூட

பொதுமக்கள் நிம்மதியாக பயணம் செய்து வருகின்றனர்.

மக்களின் இந்த நிம்மதியை கெடுக்கும் வகையிலான ஒரு சம்பவம் வட மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

டெல்லி – கல்கத்தா(ஹவுரா) இடையே இயக்கப்படும் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில்(12274) ரயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பீகார் மாநிலம் பாட்னா அருகே சென்ற போது அபாய சங்கிலி ஒலித்ததால் ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர், அதில் ஏறிய கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் பெண்கள் மற்றும் ஆண்களிடம் விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் கல்லூரிக்குள் சுவர் ஏறி குதித்த மாணவர்கள்.. டெல்லியில் நடந்தது என்ன?

இச்சம்பவம் குறித்து பீகார் மாநில ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் அடங்கியிருந்த ரயில் கொள்ளையர்கள் மீண்டும் தங்களது வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது வட மாநில ரயில் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.