கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் சென்னையை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: உத்தரகாண்ட்  மாநிலம் ஃபாட்டாவில் இருந்து கேதார்நாத்க்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். அந்த விபத்தில் சென்னையை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் ஆறுதல் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் உடல்களை சென்னைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசு, உத்தரகாண்ட் அரசுடன் இணைத்து மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.