புதுடில்லி: கின்னஸ் உலக சாதனை நிறுவனம் திங்கள் கிழமை சிறப்பான நாள் இல்லை அது மோசமான நாள் என அறிவித்துள்ளது.
இதனை கின்னஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் பதவிவேற்றியுள்ளதை பலரும் பாராட்டி லைக் செய்தும், ஷேர் செய்தும் வருகின்றனர். அப்பாடா, இதை கண்டுபிடிக்க இவ்வளவு நாட்கள் ஆனதா என்று பலரும் கின்னஸ் நிறுவனத்தின் இந்த ட்வீட்டிற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.
“இதற்குதான் திங்கட்கிழமை நான் வீக் ஆஃப் எடுத்துகொள்வேன்.” என்று ஒரு டிவிட்டர் பதிவர் குறிப்பிட்டுள்ளார். கின்னஸ் நிறுவனமும் இவருடைய கமெண்டிற்கு ‘ புத்திச்சாலிதனம்’ என்று பாராட்டி உள்ளது.
கின்னஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பிடிக்குமா என்றால், தைரியமாக சொல்லலாம். ஏனெனில், கின்னஸ் நிறுவனமே அறிவித்தாயிற்று. வாரத்தின் மிக மோசமான நாள்- திங்கள் கிழமைதான். இதற்கு சிலர் நகைச்சுவையாக கமெண்ட்களை செய்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement