லிலிபெட், ஆர்ச்சியை சந்திக்கவுள்ள மன்னர்! முடிசூட்டு விழாவிற்கு ஹரி-மேகன் வருகை நிச்சயம் – நிபுணர் கருத்து


அயர்ச்சியும் லிலிபெட்டும் மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வார்கள்.

மன்னர் மூன்றாம் சார்லஸ் அடுத்த ஆண்டு தனது பேரக்குழந்தைகளான லிலிபெட், ஆர்ச்சியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டு மன்னரின் முடிசூட்டு விழாவிற்காக இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலுடன் அவர்களது குழந்தைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட் பிரித்தானியாவிற்கு செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

அப்போது மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது பேரக்குழந்தைகள் லிலிபெட் மற்றும் ஆர்ச்சியுடன் மீண்டும் இணைவார் என்று கூறப்படுகிறது.

இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் தம்பதி மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக அரச நிபுணர் மற்றும் எழுத்தாளரான Russell Myers நம்புகிறார், ஏனெனில் அவர்களின் எதிர்காலம் அதில் அடங்கியுள்ளதாக அவர் கூறுகிறார்.

லிலிபெட், ஆர்ச்சியை சந்திக்கவுள்ள மன்னர்! முடிசூட்டு விழாவிற்கு ஹரி-மேகன் வருகை நிச்சயம் - நிபுணர் கருத்து | Lilibet Archie King Charles Coronation Harry Megha

Russell Myers கூறியதாவது: “அவர்கள் (ஹரி மற்றும் மேகன்) வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஹரியும் மேகனும் அங்கு இருக்க மாட்டார்கள் என்று என் வாழ்நாள் முழுவதும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை… அவர்கள் கண்டிப்பாக வருவார்கள்… அதில் சந்தேகமே இல்லை.”

மேலும், “ஆர்ச்சியின் பிறந்தநாளில் அவர்கள் குழந்தைகளை அங்கே விட்டுவிடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை, அதனால் அவர்கள் ஒரு வாரத்திற்கு வந்து முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வார்கள், அவர்கள் தங்கள் அரச குடும்ப உறவுகளுடன் நேரத்தை செலவிடுவார்கள் – அவர்களின் உறவுகள் அப்போது எப்படி இருக்கும் என்று யாருக்குத் தெரியும்” என்று கூறியுள்ளார்.

லிலிபெட், ஆர்ச்சியை சந்திக்கவுள்ள மன்னர்! முடிசூட்டு விழாவிற்கு ஹரி-மேகன் வருகை நிச்சயம் - நிபுணர் கருத்து | Lilibet Archie King Charles Coronation Harry Megha

கடந்த மாதம் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் ஹரியும் மேகனும் மட்டுமே கலந்துகொண்டனர், ஆர்ச்சியும் லிலிபெட்டும் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் தங்கள் பெற்றோர்களை பிரித்து அமெரிக்காவிலேயே இருந்தனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.