புதுடெல்லி: சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருக்கும் இந்திய தீவிரவாத அமைப்புகள், ஆதரவாளர்கள், போதை பொருள் கடத்தல்காரர்கள், பிரபல தாதாக்கள் ஆகியோர் இடையே வளர்ந்து வரும் தொடர்பு குறித்து கிடைக்கும் ரகசிய தகவலின் பேரில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து வருகிறது.
கடந்த மாதம் 12ம் தேதி டெல்லி காவல்துறை பதிவு செய்த 2 வழக்குகளின் அடிப்படையில் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் சமீபத்தில் என்ஐஏ சோதனை நடத்தியது. இந்நிலையில், பஞ்சாப், அரியானா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில், 50 இடங்களில் என்ஐஏ நேற்று சோதனை நடத்தியது. இதில், தீவிரவாத சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.