வாடகைத்தாய் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சின்மயி

பாடலாசிரியர் வைரமுத்து மீது மீடூ புகார் அளித்ததை தொடர்ந்து பெரும்பாலும் பரபரப்பு வளையத்திலேயே இருந்து வந்தார் பின்னணி பாடகி சின்மயி. தொடர்ந்து சக பெண் கலைஞர்கள் ஏதாவது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது தனது குரலை தவறாமல் பதிவு செய்தும் வந்தார். இந்த சமயத்தில் தான் கடந்த ஜூன் மாதம் திடீரென தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஒருசேர கொடுத்தார் சின்மயி.

அதுவரை தான் கர்ப்பமான புகைப்படங்களையோ அல்லது வளைகாப்பு போன்ற விசேஷ நிகழ்வுகள் நடைபெற்ற புகைப்படங்கள் எதையும் அவர் பகிர்ந்து கொள்ளாததால் ஒருவேளை வாடகைத்தாய் மூலமாக சின்மயி குழந்தை பெற்றிருக்கலாம் என்றே பலரும் அப்போது சந்தேகக் கேள்விகளை எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியினர் இரட்டை குழந்தைகள் பெற்ற விவகாரம் பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவர்கள் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் தான் சின்மயி தான் கர்ப்பமாக இருந்தபோது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தான் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெறவில்லை என இதுவரை நிலவிய சந்தேகத்திற்கு. முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதுபற்றி சின்மயி கூறும்போது, “நான் எப்பொழுதுமே என்னுடைய பர்சனல் வாழ்க்கையை யாருக்கும் வெளிச்சம் போட்டுக்காட்ட விரும்பியதில்லை. இனிமேலும் அப்படித்தான். அதனால் தான் கர்ப்பமாக இருந்த காலகட்டத்தில் இப்போது பதிவிட்டுள்ள இந்த ஒரே ஒரு புகைப்படத்தை தவிர வேறு எந்த புகைப்படமும் எடுக்கவில்லை ஆனால் நிறைய புகைப்படங்கள் எடுத்து இருக்கலாமோ என்று இப்போது வருத்தப்படுகிறேன்

எனக்கு குழந்தை பிறந்த சமயத்தில் பலரும் வாடகைத்தாய் மூலமாக தான் குழந்தை பெற்றீர்களா என நேரடியாக எனக்கு மெசேஜ் அனுப்பி தங்களது சந்தேகத்தை கேட்டனர். அதற்கு காரணம் மேலே சொன்னதுபோல நான் எந்த ஒரு புகைப்படத்தையும் வெளியிடாதது தான். மேலும் கர்ப்ப காலத்தில் நான் பணிபுரியும் சமயத்தில் கூட என்னுடன் பணியாற்றிய சக கலைஞர்கள் என்னுடைய கர்ப்பம் குறித்து தெரிந்தாலும் எனது பிரைவசிக்கு மதிப்பு கொடுத்து புகைப்படங்கள் எடுக்காமலும் இதுகுறித்த தகவல்களை வெளியிடாமலும் வைத்திருந்தனர். அதற்கு அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.