சென்னை: சென்னை விமான நிலையம் நாட்டிலேயே 3ம் இடத்தில் இருந்தது; தற்போது பயணிகளை கையாளுவதில் 5ம் இடத்தில் உள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சரக்குகளை கையாளும் திறனில் சென்னை விமான நிலையம் 7 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. அண்டை மாநிலங்களில் புதிய விமான நிலையம் இருப்பதால் தான் வளர்ச்சி பெற்று வருகின்றன. 30 ஆண்டுக்கான தேவையை இப்போது நாம் கட்டமைக்க வேண்டியது அவசியம். 10 கோடி பயணிகளை கையாளும் வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுகிறது என்று பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
