
தண்ணீரின் வெப்பம் அதிகரிப்பதால் அலாஸ்காவின் ஸ்னோ நண்டுகள் கூட்டம் கூட்டமாக இறந்து, அதன் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. அதனால் இந்த ஆண்டு அதன் அறுவடையை நிறுத்த அலாஸ்கா திட்டமிட்டுள்ளது.

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியம் உயர்த்தி வழங்கக்கோரி பிரான்ஸில் மக்கள் போராட்டம்.

கருக்கலைப்பு உரிமைகள் நிச்சயம் கருத்தில் கொள்ளப்படும் என தேர்தல் பிரசாரத்தில் அமெரிக்க அதிபர் உறுதி.

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் கால்பந்து உலகக்கோப்பைக்காக சோலார் மின் உற்பத்தி நிலையங்களை கத்தார் அரசு திறந்துள்ளது.

ரஷ்யாவுடன் ரகசிய தொடர்பில் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஜெர்மனியின் சைபர் பாதுகாப்பு உயர் அதிகாரி பதவிநீக்கம்.

புத்தரிடம் கேள்விகள் கேட்பது போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஜப்பான் விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

சோமாலியா கடந்த அரை நூற்றாண்டுகளில் இல்லாத வறுமையை தற்போது சந்தித்து வருவதாக ஐ.நா கூறியுள்ளது.

இத்தாலியின் சிறந்த கைப்பந்து வீராங்கனை பௌலா எகோனு, அவர்மீது தொடுக்கப்பட்ட இனவெறி தொடர்பான கருத்துகளால் அணியைவிட்டு வெளியேறினார்.

17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஜப்பான் காலிறுதிக்கு முன்னேற்றம்.

இங்கிலாந்தின் தேம்ஸ் நதிக்கு அடியில் பிளாஸ்டிக் குவியல் இருப்பதால் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.