புதுடில்லி : மத்திய ராணுவ மற்றும் வருவாய் அமைச்சகங்களுக்கு புதிய செயலர்கள் நேற்று நியமிக்கப்பட்டனர்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கான செயலர்கள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை மத்திய அரசுப்பணியாளர்கள் நலத்துறை நேற்று வெளியிட்டது. அதன் விபரம்:
ராணுவ செயலராக பதவி வகித்து வரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அஜய்குமார் வருகிற 31ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
இதையடுத்து, புதிய ராணுவ செயலராக அரமானே கிரிதர் நியமிக்கப்பட்டுள்ளார். 1988ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்ற கிரிதர், தற்போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலராக பதவி வகித்து வருகிறார். இந்த பதவியில், அல்கா உபாத்யாய் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், மத்திய நிதி சேவைகள் துறையின் செயலராக பதவி வகித்து வரும் சஞ்சய் மல்கோத்ரா, வருவாய் துறையின் புதிய செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இத்துறையின் செயலராக உள்ள தருண் பஜாஜ் அடுத்த மாதம் 30ல் பணி ஓய்வு பெற்ற பின்,சஞ்சய் மல்கோத்ரா பொறுப்பேற்பார்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement