பதுளை மாவட்டத்தில் தேசிய இளைஞர் சேவை மன்றம், ஊவா மாகாண சபை, எல்ல இளைஞர் கழக பிராந்திய சபை மற்றும் பதுளை இளைஞர் கழக மாவட்ட சம்மேளனம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இணையவழி வர்த்தகம் (இ-பிசினஸ்) பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி (18) எல்ல பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பதுளை மாவட்ட இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் எல்ல பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு இணையவழி தொழில் வாய்ப்புகள் இருப்பதை தெளிவுப்படுத்துவதே இந் நிகழ்ச்சி திட்டத்தின் நோக்கமாகும்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் எல்ல பிரதேச செயலாளர் இந்திக்க கயான் பத்திரன மற்றும் உதவி பிரதேச செயலாளர் திருமதி. சுகந்திகா தலைமையில் நடைபெற்றது.