தமிழக அரசு பள்ளி மாணவர்கள் செல்லும் வாகனங்களில் முன்பும் பின்பும் கட்டாயம் கேமரா பொருத்துவது தொடர்பான சட்ட திருத்த வரைவு கடந்த ஜூன் 29ஆம் தேதி உள்துறை செயலாளரால் அரசிதழில் வெளியிடப்பட்டிருந்தது. இந்தச் சட்டத் திருத்தத்தின் மீது மக்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கள் தரப்பு கருத்தை தெரிவிக்கும் படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன் காலக்கெடு கடந்த ஜூலை 29ஆம் தேதி முடிவடைந்த நிலையில் அரசு இது குறித்தான பரிசீலனை நடத்தி வந்தது.
இந்த நிலையில் பள்ளி பேருந்துகளில் முன்பும் பின்பும் கேமராவும் பின்பகுதியில் சென்சார் கருவியும் கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளி வாகனங்களில் மாணவர்கள் சிக்கி விபத்துக்கு உள்ளாவதை தடுக்கும் வகையில் அனைத்து பள்ளி பேருந்துகளிலும் கேமரா மற்றும் சென்சார் பொருத்தப்படுத்துவதை கட்டாயமாக்க தமிழக அரசு முடிவு செய்து அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.