தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்
உட்கட்சி பூசலில் சிக்கி தவித்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் நாற்காலியை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் சபாநாயகர் சாதகமான முடிவு எடுக்காததால் போராட்ட முடிவை கையில் எடுத்தார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தடையை மீறிய போராடியதாக கூறி அதிமுக எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். இதையடுத்து ஜூஸ் குடித்து உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார் எடப்பாடி பழனிசாமி. பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலினும், ஓ.பன்னீர்செல்வமும் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்ததாக கூறி பரபரப்பை கிளப்பினார்.
இது அரசியல் அரங்கில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் தனது சொந்த ஊரான சேலத்திற்கு எடப்பாடி பழனிசாமி திரும்பியுள்ளார். வழியில் பெத்தநாயக்கன்பாளையத்தில் நெருங்கிய நண்பரும், சேலம் புறநகர் மாவட்ட செயலாளருமான
வரவேற்பு அளித்தார். பின்னர் அங்குள்ள ஸ்ரீமுத்துமலை முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
இங்கு தான் உலகிலேயே மிகப்பெரிய 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு முறை சேலம் வரும் போதும், புறப்பட்டு செல்லும் போதும் ஸ்ரீமுத்துமலை முருகனை தவறாமல் தரிசனம் செய்வதை எடப்பாடி பழனிசாமி வழக்கமாக்கி வைத்திருக்கிறார். அதன்படி நேற்று இரவு தரிசனம் செய்த போது சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.ஜெயசங்கரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தற்போது சேலம் திரும்பிய நிலையில் தீபாவளி பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாட உள்ளார். அதை முடித்துவிட்டு அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் தொடர்பாக கட்சியினருடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிகிறது. ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையால்
, ஓபிஎஸ்சிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் தனது ரூட் கொஞ்சம் கிளியர் ஆகிவிட்டதாக எடப்பாடி கருதுகிறார்.
எனவே கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையை நீக்க சட்டப் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. அதற்கான ஆலோசனை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் கொடநாடு வழக்கு, நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு, அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை ஆகிய விஷயங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதுகுறித்தும் வழக்கறிஞர்கள் உடன் ஆலோசித்து முடிவுகள் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.