மயிலாடுதுறை மீனவரை சுட்ட வீரர்கள்: விசாரணைக்கு இந்திய கடற்படை உத்தரவு

சென்னை: மயிலாடுதுறை மீனவர்களை வீரர்கள் சுட்டது தொடர்பாக இந்திய கடற்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கோடியக்கரை அருகே வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தவறுதலாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வீரவேல் என்ற மீனவர் படுகாயம் அடைந்திருக்கிறார்.

இது குறித்து ராணுவ மக்கள் தொடர்பு தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இன்று இந்தியா – இலங்கை சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் இந்திய கடற்படை கப்பல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது சந்தேகத்திற்குரிய படகு ஒன்று காணப்பட்டது. பல முறை எச்சரித்தும் படகு நிற்கவில்லை.

வழிகாட்டு நெறிமுறைகள்படி, படகை நிறுத்த துப்பாக்கியால் சுடப்பட்டது. இதில் படகில் இருந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த நபருக்கு கப்பலில் முதலுதவி அளிக்கப்பட்டு, கடற்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு கடற்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரின் உடல் நிலை சீராக உள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.” என்று கூறப்பட்டுள்ளது.


— Defence PRO Chennai (@Def_PRO_Chennai) October 21, 2022

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.