சென்னை: சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்க விவகாரத்தில் ஒன்றிய அரசு, திருச்சி சுங்கச்சாவடி நிறுவனம் பதில் தர ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாடு சுங்கச்சாவடி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கே.காரல் மாக்ஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஒன்றிய அரசு, திருச்சி சுங்கச்சாவடி நிறுவனம் பதில் தர உத்தரவிட்டு வழக்கை அக்.27-க்கு ஒத்திவைத்துள்ளனர்.
