‘மை ஆட் சென்டர்’ மூலம் விளம்பரங்களை பயனர்கள் கட்டுப்படுத்தலாம்: கூகுள் அறிவிப்பு

கலிபோர்னியா: ‘மை ஆட் சென்டர்’ மூலம் பயனர்கள் தாங்கள் பார்க்கும் விளம்பரங்களை கட்டுப்படுத்தலாம் என கூகுள் தெரிவித்துள்ளது. இதை அந்நிறுவனம் பிளாக் பதிவு மூலம் பகிர்ந்துள்ளது. உலகம் முழுவதும் இந்த அம்சத்தை பயனர்கள் பெறுவர் எனவும், வெகு விரைவில் இது அறிமுகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி வரும் ஒவ்வொருவரும் விளம்பரங்கள் குறுக்கிட்டு கொடுக்கும் சங்கடங்களை எதிர்கொண்டிருப்போம். அது டெக்ஸ்ட், வீடியோ என எல்லா கன்டென்டுக்கும் பொருந்தும். சமயங்களில் சம்பந்தமில்லாத விளம்பரங்கள் கூட டிஜிட்டல் சாதன பயனர்களுக்கு சங்கடம் கொடுக்கும். பெரும்பாலும் இணையத்தளத்தில் ஆக்டிவாக இயங்கும் நபர்கள் கூகுள் நிறுவன புராடெக்டுகளை தான் பயன்படுத்துவர். அதிலும் இது மாதிரியான விளம்பரங்கள் வரும்.

அதற்குதான் இப்போது ‘மை ஆட் சென்டர்’ மூலம் தீர்வை கொண்டு வந்துள்ளது கூகுள். இதன்மூலம் பயனர்கள் தாங்கள் பார்க்கின்ற அல்லது எதிர்கொள்கின்ற விளம்பரங்களை கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கூகுள் நிறுவன செயலிகள் மற்றும் தளங்களுக்கு பொருந்தும் என சொல்லப்பட்டுள்ளது.

அதாவது, இதன் மூலம் விளம்பரங்கள் அறவே இருக்காது என பயனர்கள் என்ன வேண்டாம். ‘மை ஆட் சென்டர்’ மூலம் பயனர்கள் தங்களுக்கு பிடித்தமான பிராண்ட் சார்ந்த விளம்பரங்களை பார்க்கும் வகையில் செட் செய்து கொள்ள முடியும் எனத் தெரிகிறது. அதேநேரத்தில் பயனர்கள் தங்களுக்கு விரும்பாத விளம்பரங்களை தவிர்த்து விடவும் முடியுமாம். குறிப்பாக மது, டேட்டிங், எடை குறைப்பு, சூதாட்டம் சார்ந்த விளம்பரங்கள் இதன்மூலம் கட்டுப்படுத்தலாம் எனத் தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.