டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு மூன்று நாட்கள் லீவு? -நிறைவேறுமா பாஜக கோரிக்கை!

கோவை மக்கள் சேவை மையம் சார்பில் ‘மோடியின் மகள்’ திட்டத்தில் 5 வயது முதல் 12 வயது வரை உள்ள தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி வடகோவை பகுதியில் உள்ள குஜராத் சமாஜத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான

தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சிக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

கல்வி கற்ற குழந்தைகளுக்கும், திறமை படைத்த குழந்தைகளுக்கும் ஊக்கம் கொடுக்கும் வகையில் வருடம் முழுதும் அவர்களுடன் தொடர்பிலிருந்து அவர்களின் நலனை பேணி காக்க உள்ளோம்.

90% சதவீதம் ஆண்கள் இறக்க மதுவே காரணம். தமிழக அரசு தொடர்ந்து மதுக்கடைகளை திறந்து இளம் விதவைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றது.எனது தொகுதிக்குட்பட்ட தெற்கு தொகுதியில் கூட மார்க்கெட் பகுதியான ஒப்பணக்கார வீதி பகுதியில் மதுக்கடையை திறந்துள்ளார்கள். தமிழக முதல்வரின் போதை ஒழிப்பு தீர்மானம் கண் துடைப்பு தான்.

மதுவால் 40 வயதுக்குள் இறந்த ஆண்களின் குடும்பங்களுக்கு மதுக்கடையை நடத்தும் மாநில அரசு தான் பதில் சொல்ல வேண்டும். இதற்கு பாஜக குரல் கொடுக்கும். தமிழக அரசு இதுபோன்ற குடும்பங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

குறைந்தபட்சம் தீபாவளி பண்டிகையின் போதாவது குடும்பங்கள் நிம்மதியாக இருக்க 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். மாறாக, மது விற்பனைக்கு இலக்கை வைப்பது நல்ல அரசாங்கமாக இருக்க முடியாது.

திமுக அமைச்சர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. அவர்களின் பிள்ளைகள் இந்தி கற்றுக் கொண்டு உள்ளார்கள். ஆனால் யார் ஏமாற்றப்படுகிறார்கள் என்றால் அரசாங்க பள்ளியில் படிக்கும் ஏழை குழந்தைகள் தான். தமிழக அரசுக்கு இன்னொரு மொழியை கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அக்கறை இல்லை.

தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதைத்தான் புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. மோடி மருத்துவக் கல்வி உட்பட அனைத்து படிப்புகளையும் தாய்மொழியில் கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிறார். ஏன் முதல்வர் தாய்மொழியில் கற்றுக் கொடுக்க முயற்சி எடுக்கவில்லை? என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.