பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினங்களில் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கும் பாராளுமன்ற விவாதங்களைப் பார்வையிடுவதற்கும் பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து முன்வைத்த யோசனைக்குப் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு நேற்று (21) அனுமதி வழங்கியது.
இதற்கமைய பாராளுமன்றத்தில் உள்ள பொதுமக்கள் கலரியிலிருந்து பாராளுமன்ற விவாதங்களைப் பார்வையிடப் பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும்.
கொவிட் சூழல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் கடந்த செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் தளர்த்தப்பட்டிருந்தபோதும் பாராளுமன்ற அமர்வு நாட்களில் பார்வையிடுவதற்கான அனுமதி மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்த மட்டுப்பாடுகளும் தற்பொழுது தளர்த்தப்பட்டுள்ளன.
எனவே, பாடசாலை அதிகாரிகள் தமது விண்ணப்பத்தை படைக்கலசேவிதருக்குக் கடிதம் மூலம், தெலைநகல் மூலம் (0112777473/ 0112777335) அல்லது www.parliament.lk என்ற இணையவழியூடாக சமர்ப்பிக்க முடியும்.
Department of Communication
Parliament of Sri Lanka
Sri Jayawardenepura Kotte,
Sri Lanka.