10 ஆண்டுகளாக தொடர்ந்த சேவை: நிறுத்துகிறது பி.எஸ்.என்.எல். நிறுவனம்..!

‘ஜி மெயில், யாஹூ’ என பல்வேறு இ – மெயில் சேவைகளை பன்னாட்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இதேபோல, மத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். சார்பிலும் dtat1.in, bsnl.in உட்பட சில இ – மெயில் சேவைகள் வர்த்தக ரீதியிலும், மதிப்புக் கூட்டு சேவையாகவும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. இந்த சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாததால், அவற்றை நிறுத்த பி.எஸ்.என்.எல். நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் கூறியதாவது: ‘பி.எஸ்.என்.எல். ‘பிராட்பேண்ட்’ சேவை பெறும் வாடிக்கையாளர்களுக்கு மதிப்புக் கூட்டு சேவையாக இ – மெயில் மற்றும் ‘இ – மெயில் பாக்ஸ்’ சேவை வழங்கப்பட்டு வந்தது. இந்த சேவை, 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. தற்போது, பி.எஸ்.என்.எல். இ – மெயில் சேவைக்கான தேவை வாடிக்கையாளர்களிடம் குறைந்துள்ளது. அதனால், இந்த சேவையை நிறுத்துவதற்கு பி.எஸ்.என்.எல். நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும், இ – மெயில் சேவைக்கான செலவை குறைப்பதற்காகவும் இந்த நடவடிக்கையை பி.எஸ்.என்.எல். நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்’ என்று அவர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.