தர்மபுரி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவியை கடத்திய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் நாகசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன். இவரது மகன் சிபி (19). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்து காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மாணவியை கடத்தி சென்ற சிபி என்பவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று சிபியை கையும் களவுமாக பிடித்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தியதில் வானதியை கடத்தி சென்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் சிபியை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.