இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் நேற்று நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
லேகாபாலியில் இருந்து கிளம்பிய ராணுவ ஹெலிகாப்டர் உப்பர் சியாங் மாவட்டம் மிக்கிங் (தெற்கு டியுடிங்) பகுதியில் வெள்ளிக்கிழமை காலை விழுந்து விபத்துக்குள்ளானது.
ராணுவம் மற்றும் விமானப் படை இணைந்து மீட்பு பணி களை மேற்கொண்டன. நீண்ட தேடுதலுக்குப் பின்பாக நான்கு பேரின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரு கிறது. இவ்வாறு ராணுவம் தெரிவித்துள்ளது.
ஒருவாரத்துக்கு முன்பாக நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி ராணுவ விமானி ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.