கணவனையும் மைத்துனனையும் ஒன்றிணைக்க 'மாஸ்டர் பிளான்' போடும் கேட்! அமெரிக்காவில் தனிப்பட்ட சந்திப்பு


இளவரசி கேட் மற்றும் இளவரசர் வில்லியம் டிசம்பரில் அமெரிக்கா செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இளவரசி டயானாவும், ராணி இரண்டாம் எலிசபெத்தும் அதைத்தான் விரும்பியிருப்பார்கள் என்பது கேட்டுக்கு தெரியும்.

பிரித்தானிய அரச குடும்பத்தையும், இளவரசர் ஹரி மற்றும் வில்லியம் சகோதரர்களையும் மீண்டும் இணைக்க இளவரசி கேட் மிகப்பாரிய திட்டத்தை வைத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேல்ஸ் இளவரசி கேட், தனது கணவர் இளவரசர் வில்லியம் மற்றும் மைத்துனர் இளவரசர் ஹரிக்கு இடையே உள்ள இடைவெளியை உடைக்க ஆவலுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

அரச குடும்பத்திற்கு நெருக்கமான இரண்டு நபர்களின் கூற்றுப்படி, இந்த ஆண்டின் இறுதியில் வேல்ஸின் இளவரசர் மற்றும் இளவரசியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்கப் பயணத்தின் போது ஒருமுறை நெருங்கிய சகோதரனை மீண்டும் இணைக்கும் திட்டத்தை கேட் உருவாக்கலாம் என்று தெறிவித்துள்ளனர்.

கணவனையும் மைத்துனனையும் ஒன்றிணைக்க

இளவரசி கேட், சகோதரர்களை ஒன்றிணைத்து பிளவைக் குணப்படுத்த விரும்புகிறார் என்றும் மறைந்த இளவரசி டயானாவும், ராணி இரண்டாம் எலிசபெத்தும் அதைத்தான் விரும்பியிருப்பார்கள் என்பது கேட்டுக்கு தெரியும் என்று இத்தகவல்களை வெளியிட்ட ஆதாரங்களில் ஒருவர் கூறினார்.

மறைந்த இளவரசி டயானாவின் விருப்பமான நியூயார்க்கில் உள்ள கார்லைல் ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெறலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த சந்திப்பு ரகசியமாக தனிப்பட்டமுறையில் நடைபெறும் என்று இரண்டாவது ஆதாரம் கூறியுள்ளது.

அவர் கூறியதாவது: இது தனிப்பட்ட இடத்தில் ஒரு சிறிய சந்திப்பாக இருக்கும். ராணியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளின்போது, ஹரிக்கும் வில்லியமுக்கும் இடையே உள்ள இடைவெளிகல் சில குறைந்தன.

மேலும், கேட் இன்னும் இருவர் மீதும் நிறைய பாசம் வைத்திருக்கிறார். ஹரிக்கு, அவருக்கும் அவரது கணவருக்கும் இடையே பிளவு இருப்பதை அவள் வெறுக்கிறார், என்று கூறினார்.

கணவனையும் மைத்துனனையும் ஒன்றிணைக்க GettyImages

வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசி இருவரும் வரும் டிசம்பரில், எர்த்ஷாட் பரிசின் இரண்டாவது விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக, அமேரிக்கா செல்லும்போது, சரியான நேரத்தில் பாஸ்டனுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், ராபர்ட் எஃப். கென்னடி மனித உரிமைகள் வழங்கும் 2022 ரிப்பிள் ஆஃப் ஹோப் விருதைப் பெறுபவர்களாக மேகன் மார்க்லே மற்றும் இளவரசர் ஹரி ஆகியோர் டிசம்பர் 6 ஆம் திகதி பிக் ஆப்பிளுக்குச் செல்ல முடிவு செய்யலாம்.

அப்போது நால்வரும் ஓரிடத்தில் ஒரு சிறிய சந்திப்பை திட்டமிடலாம் என்று கூறப்படுகிறது.

கணவனையும் மைத்துனனையும் ஒன்றிணைக்க GettyImages

2019-ல் பிரித்தானிய ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய இளவரசர் ஹரி, தனது சகோதரன் வில்லியமை எப்போதும் நேசிப்பேன், ஆனால் “நாங்கள் வெவ்வேறு பாதைகளில் இருக்கிறோம்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.