கோராக்பூர்: ரயிலுக்குள் நடந்து செல்லும் வழியில் அமர்ந்து தொழுகையில் ஈடுபட்ட சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரப் பிரதேசம் மாநிலம், குஷிநகரில் உள்ள கடா ரயில் நிலையத்தில் கடந்த 20ம் தேதி சத்தியாகிரக விரைவு ரயில் வந்தது. அப்போது, ரயிலில் இருந்து 4 பேர், நடந்து செல்லும் வழியில் அமர்ந்து தொழுகையில் (நமாஸ்) ஈடுபட்டனர். இதுதொடர்பாக வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் தொழுகை செய்யும் 4 பேரில் ஒரு நபர் மக்களை நோக்கி காத்திருக்க சொல்லி சைகை காட்டுகிறார். இதுகுறித்து எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. இருப்பினும் இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
